
டெங்குவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும் உணவுகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கொசுக்களால் ஏற்படும் டெங்கு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த மாதம் மட்டும் 1,198 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நடப்பாண்டில் மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்டால், விரைவில் குணமடைய உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
2nd card
டெங்குவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும் உணவுகள்-2
இளநீர்- இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் நீங்கள் நோயிலிருந்து மீண்டு வரும்போது, உங்கள் உடம்பில் நீரிழிப்பு ஏற்படுவதை தடுக்கும். மேலும் இரண்டு கோப்பை சுத்தமான இளநீரை குணமாகும் காலத்தில் பருகி வந்தால், நம் உடம்பில் உள்ள நச்சுக்களை அகற்றப்படும். நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள அது உதவும். பப்பாளி இலைகள்- டெங்குவிற்கு மிகவும் வழக்கமாக பரிந்துரைக்கப்படும் ஒரு நிவாரணி. டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது பப்பாளி இலைகளை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இது உதவுகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின்படி, பப்பாளி இலைகளை அரைத்து சாராகவும் நீங்கள் பருகலாம்.
3rd card
டெங்குவில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும் உணவுகள்-3
சோமவல்லி/ சீந்தில் செடியின் சாறு- இதய நோய் முதல் நீரிழிவு நோய் வரை அனைத்திற்கும் உதவும் சீந்தில் சாறு, டெங்கு நோய்க்கும் பயன்படுகிறது. இதன் ஆண்டிபிரைடிக் பண்புகள் காய்ச்சலை குறைக்க உதவுகிறது. மேலும் பிளேட்லெட் எண்ணிக்கையும் அதிகரித்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. ஆரஞ்சு, மாதுளை பழங்கள்- ஆரஞ்சு, மாதுளையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நீங்கள் டெங்குவிலிருந்து விரைவில் குணமடைய உதவுகிறது. ஆரஞ்சு உடம்பில் நீர் வற்றிபோதலை தடுத்து, விட்டமின் சியை வழங்குகிறது. மாதுளம் பழம் பிளட்லெட் எண்ணிக்கையை உயர்த்த உதவுகிறது. மூலிகை தேநீர்- மிளகு, ஏலக்காய், இஞ்சி அல்லது இலவங்கப்பட்டையை சேர்த்து வீட்டில் தயாரிக்கும் தேநீர் உடலுக்கு ஊட்டமளிக்கிறது. தொண்டை புண், சளி காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் நிவாரணம் தருகிறது.