Loading...
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நியாயப்படுத்திய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்; கிளம்பிய எதிர்ப்பு குரல்கள்
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நியாயப்படுத்தியுள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நியாயப்படுத்திய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்; கிளம்பிய எதிர்ப்பு குரல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
03:14 pm

செய்தி முன்னோட்டம்

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு மாநில அரசு எந்தவித தடையும் விதிக்காததை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நியாயப்படுத்தியுள்ளார். காற்று மாசு குறித்த கவலைகளைப் புறந்தள்ளிய அவர், அயோத்தியில் பட்டாசுகளுக்கு மத்தியில் தானும் கலந்துகொண்டதாக குறிப்பிட்டதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரங்களில் மட்டுமே சுற்றுச்சூழல் குறித்து கவலைப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் யோகி,"தீபாவளியன்று காற்று மாசு ஏற்பட்டாலும், அது காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும்...அது ஒரு பெரிய பிரச்னை அல்ல. ஊழல் மூலம் ஒட்டுமொத்த அமைப்பையும் மாசுபடுத்தியவர்களை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி, பட்டாசுகளை வெடித்தது மிகச் சரியானதே." எனத்தெரிவித்தார்.

காற்றுத் தரம்

வட இந்தியாவில் மோசமடையும் காற்றுத் தரம்

யோகி ஆதித்யநாத்தின் இந்தக் கருத்துக்கள், தீபாவளிக்கு பிறகு வட இந்தியாவில் காற்றுத் தரம் கடுமையாக மோசமடைந்துள்ள சூழலில் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு சராரியாக 376 ஐ எட்டியது.

இது கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிகவும் மாசுபட்ட தீபாவளியாகும்.

லக்னோவில் AQI 245 ஆகவும், வாரணாசியில் 274 ஆகவும், கோரக்பூரில் 261 ஆகவும் பதிவாகியுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புனேவை சேர்ந்த இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9 அன்று டெல்லியில் பதிவான காற்று மாசில் 80 சதவீத்திற்கும் அதிகமான பங்கு பட்டாசுகளாலேயே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT