Page Loader
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து 
க்கிய அரசியல் தலைவர்கள் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து 

எழுதியவர் Sindhuja SM
Nov 19, 2023
02:31 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து பல்வேறு அணிகள் வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, "ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா! 140 கோடி இந்தியர்களின் சார்பில் உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் பிரகாசமாக பிரகாசிக்கவும், நன்றாக விளையாடவும் மற்றும் உங்கள் விளையாட்டுத் திறனை நிலைநிறுத்தவும் வாழ்த்துகிறேன்." என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரதமரை தவிர பிற முக்கிய பிரபலங்களும் தலைவர்களும் என்ன வாழ்த்து கூறி இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய அணி மூன்றாவது முறை உலகக்கோப்பையை வெல்ல முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ட்ஜ்வ்க்ங்க

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

"உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் வலிமையைக் காட்டுங்கள். உங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடுங்கள். உங்கள் வெற்றியைத் தக்கவைத்து வரலாற்றை உருவாக்குங்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நிற்கிறது." காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி "கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் நீல நிற அணிக்கு வாழ்த்துகள். #INDvAUS அச்சமின்றி விளையாடுங்கள் - ஒரு பில்லியனுக்கும் அதிகமான இதயங்கள் உங்களுக்காக துடிக்கின்றன. உலகக்கோப்பையை வீட்டிற்கு கொண்டு வருவோம். ஜீதேகா இந்தியா!"