'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்
2024 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து, 3,500 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை இன்று (ஏப்ரல்-1) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தொடந்து, இந்த வழக்கு ஜூலை 24-ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரி பாக்கியை செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் பெற்றதையடுத்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ஐடி துறையின் சமீபத்திய நடவடிக்கைகள், அவர்களை நிதி ரீதியாக முடக்குவதை நோக்கமாகக் கொண்டவை என்று, ஆளும் பாஜக மீது எதிர்க்கட்சிகள், 'வரி பயங்கரவாதம்' என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த நடவடிக்கை, வரவிருக்கும் தேர்தலுக்கான சமநிலையை சீர்குலைக்கும் என்றும், உடனடியாக இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தலையிட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்த வருமான வரித்துறை
திங்களன்று நீதிமன்றத்தில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வில், தேர்தலின் போது காங்கிரஸுக்கு எதிராக வருமான வரித்துறை எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்காது என்று கூறினார். "அவர்களுக்கு 2024இல் 20% செலுத்த விருப்பம் வழங்கப்பட்டது. ₹135 கோடி (மீண்டும்) திரும்பப் பெறப்பட்டது...இந்த விஷயம் ரூ. 1,700 தொடர்பானது, பின்னர் திரட்டப்பட்டது. இந்த முழு விஷயத்தையும் தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் சரிசெய்யலாம்," என்று அவர் கூறினார். காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி , சொத்துகளை பறிமுதல் செய்து, மத்திய அரசு ஏற்கனவே ₹135 கோடி வசூலித்துள்ளதாக குறிப்பிட்டார். தாங்கள் லாபம் ஈட்டும் அமைப்பு அல்ல, அரசியல் கட்சி மட்டுமே என்றும் அவர் கூறினார்.