Page Loader
பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!
மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!

பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 07, 2025
12:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளை பெண்களுக்கு ஒப்படைக்கிறார். அன்றைய தினம், பெண்கள் பிரதமரின் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பெண்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிகழ்வின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: "பிரதமர் மோடியின் பாதுகாப்பை 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் உறுதி செய்வார்கள். இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும்" என்று தெரிவித்தனர். இந்த மாற்றத்தை பற்றி குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியதாவது: "இந்திய வரலாற்றில் முதல் முறையாக, வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிபேடிற்கு பிரதமரின் வருகை முதல், மகளிர் தினம் கொண்டாடும் இடம் வரை, அவரின் பாதுகாப்புக்கு பெண் போலீசாரே பொறுப்பாக இருப்பார்கள்" என்றார்.