Page Loader
காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை?
இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன.

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை?

எழுதியவர் Sindhuja SM
Nov 28, 2023
12:44 pm

செய்தி முன்னோட்டம்

காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது. இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன. இதற்கிடையில், இன்னொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அந்த சதி திட்டத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாகவும் அமெரிக்கா சந்தேகிக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான குற்றசாட்டுகளை தனித்தனியாக விசாரித்து வருகின்றன.

பில்ஜவ்கு

அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா 

இந்நிலையில், இது குறித்து பேசி இருக்கும் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, அமெரிக்காவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால், கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியா முன்பு மறுத்துவிட்டது. இந்த விசாரணைகள் தொடர்பாக இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட தகவல்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, இந்தியா இந்த இரு விவகாரங்களையும் வெவ்வேறு விதமாக அணுகியுள்ளது என்று இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார். CTV என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சஞ்சய் குமார் வர்மா, "கனடாவை போலல்லாமல், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதனால், அந்த இரு விவகாரங்களையும் இந்திய அரசு வெவ்வேறு விதமாக அணுகி இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.