Page Loader
முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS 
புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2024
11:30 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக நேற்று பல IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் குறிப்பாக, உள்துறை செயலாளராக இருந்த அமுதா மாற்றப்பட்டு, புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்? எதற்காக இந்த திடீர் இடமாற்றங்கள்?

தொடரும் கொலைகள்

தமிழகத்தில் தொடரும் கொலைகள்

தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் ரௌடியிசம் மற்றும் அரசியல் கொலைகள், அதோடு கூடுதலாக நாட்டையே உலுக்கிய கள்ளச்சாரய மரணம் உட்பட ஆளும் திமுக அரசின் மீது கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. ஸ்டாலின் அரசு சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறி விட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் சென்னையின் புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று பல IAS அதிகாரிகள் மாற்றப்பட்டன. இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை சரியாக கையாளாத காரணத்தால் இந்த மாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, உள்துறை செயலாளராக இருந்த அமுதா IAS இடமாற்றம் செய்யப்பட்டு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி தீரஜ்குமார் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தீரஜ்குமார்

பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்துறை வரை: யார் இந்த தீரஜ்குமார்

பீகார் மாநிலத்தை சேர்ந்த தீரஜ்குமார், 1993 தமிழ்நாடு IAS பேட்ச் அதிகாரி. ஆரமபத்தில் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக இருந்த அவர், கடந்த 2021ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். சென்ற ஆண்டு, வணிக வரித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்ட அவர் தற்போது, உள்துறை செயலாளராக பதவி ஏற்கவுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கிற்கு காரணமான உள்துறைக்கு தீரஜ்குமாரை நியமிக்கப்பட்டிருப்பது, அரசு இந்த விஷயத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. இவரது தேர்வை முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.