புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? எந்த அடிப்படையில் அது ஏற்றப்படுகிறது?
புயல் எச்சரிக்கை கூண்டு என்பது மீனவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில், துறைமுகங்களில் ஏற்றப்படுகிறது. புயல் உருவாகும் சூழல் முதல் அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள் வரை தெரியப்படுத்த, 11 வெவ்வேறு வகையான கூண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பகல் நேரத்தில் மூங்கில் தட்டையால் ஏற்றப்படும் கூண்டுகள், இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஏற்றப்படுகிறது. முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும் பொழுது புயல் உருவாகும் வானிலை ஏற்பட்டுள்ளதாக பொருள். துறைமுகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிககாற்று வீசும். இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இது புயல் உருவாகியுள்ளது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இது ஏற்றப்பட்டுவிட்டால் துறைமுகங்களை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.
மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏன் ஏற்றப்படுகிறது?
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திடீர் காற்றோடு பெய்யும் மழையால் துறைமுகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் என்பதை எச்சரிக்க, மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வரவிருக்கும் புயல் உள்ளூர் மக்களுக்கும், துறைமுகங்களில் உள்ள கப்பல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டால், நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாம் மற்றும் ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்திற்கு இடது பக்கமாக புயல் கரையை கடக்கும் என்பது பொருள். அதேபோல், புயல் துறைமுகத்திற்கு வலது பக்கமாக கரையைக் கடக்கும் போது ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.
ஒன்பதாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால் என்ன பொருள்?
ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு துறைமுகத்தின் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையை கடக்கும் போது, ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வலுப்பெற்ற புயல், தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுக்கும் போது, எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். மேலும், வலுப்பெற்ற புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையை கடக்கும். ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வலுப்பெற்ற புயல் தீவிர புயலாகவோ, அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, அப்புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் போது ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புகள் துண்டிக்கப்படும்போது எந்த புயல் கூண்டு ஏற்றப்படும்?
பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு அதிதீவிரப்புயல் துறைமுகத்தின் அருகில் கரையை கடக்கும் என கணிக்கப்படும் போது, பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இது ஏற்றப்பட்டால், கரையை கடக்கும் போது துறைமுகங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தும். பதினோராம் புயல் எச்சரிக்கை கூண்டு மிக தீவிர புயலுக்கு இக்கூண்டு ஏற்றப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தோடு தகவல் துண்டிக்கப்படும்போது இக்கூண்டு ஏற்றப்படுகிறது. இதனால் பலத்த சேதம் ஏற்படும்.