அடுத்த செய்திக் கட்டுரை

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
எழுதியவர்
Sindhuja SM
May 21, 2023
06:05 pm
செய்தி முன்னோட்டம்
தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
மே 21
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்--நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர்
மே 22
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மே 23 முதல் மே 25 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய இடங்கள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 21, 2023