கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் இன்று பருவமழை தொடங்கியது. இதனால் தென் தமிழக மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
மேலும், தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக,
ஜூன் 8
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன்-9
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன்-10 முதல் ஜூன் 12 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
detaisl
'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
'பிப்பர்ஜாய்' புயலுக்கான எச்சரிக்கை:
நேற்று இரவு பிப்பர்ஜாய் புயல், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் - கோவாவிற்கு மேற்கு-தென்மேற்கு திசையில் சுமார் 870 கிமீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 930 கிமீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இந்த புயல் தற்போது கோவாவில் இருந்து மேற்கு-தென்மேற்காக 860 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.