8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
ஜூன் 22
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் காட் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 23
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியா
ஜூன் 23
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் காட் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 24
தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 25
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.