Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jan 26, 2024
07:59 pm

செய்தி முன்னோட்டம்

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 23 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 24 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.

டியூகிவ்ஜ்க 

ஜனவரி 25 முதல் ஜனவரி 29 வரை 

தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை.