Page Loader
தமிழ்நாட்டில் விஜயதசமி கொண்டாட்டம் - கல்வியை துவங்கிய மழலைகள் 
தமிழ்நாட்டில் விஜயதசமி கொண்டாட்டம் - கல்வியை துவங்கிய மழலைகள்

தமிழ்நாட்டில் விஜயதசமி கொண்டாட்டம் - கல்வியை துவங்கிய மழலைகள் 

எழுதியவர் Nivetha P
Oct 24, 2023
04:34 pm

செய்தி முன்னோட்டம்

நாடு முழுவதும் இன்று(அக்.,24) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய(அக்.,23) தினம் ஆயுதபூஜை முன்னிட்டு அனைவரும் தங்கள் கல்வி சார்ந்த பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றைக்கு பூஜை செய்திருப்பர். இந்நிலையில், பள்ளி செல்லவுள்ள குழந்தைகள் தங்கள் எழுத்து பயிற்சியினை நெற்பயிர்களில் எழுதி துவங்கும் 'வித்யா ஆரம்பம்' என்னும் நிகழ்வு இன்றைய சிறப்பு ஆகும். அதன்படி பலரும் கோவில்கள், பள்ளிகளில் இந்த பயிற்சியினை தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று துவங்கி வைத்தனர். குழந்தைகளுக்கான பள்ளி சேர்க்கையும் இன்று அதிகளவில் நடந்தது. மேலும் இந்நாளை முன்னிட்டு மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றனர். கல்வி மற்றும் கலைகளில் மேம்பட இன்றைய தினத்தில் குருவை வழிபடுவது என்பது நமது கலாச்சார பழக்கங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

கல்வியை துவங்கிய மழலைகள்