LOADING...
வெற்றி பேரணியில் தமிழ்நாடு; MYTVK மொபைல் செயலியை தொடங்கி வைத்து விஜய் பேச்சு
MYTVK மொபைல் செயலியை தொடங்கி வைத்து விஜய் பேச்சு

வெற்றி பேரணியில் தமிழ்நாடு; MYTVK மொபைல் செயலியை தொடங்கி வைத்து விஜய் பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 30, 2025
01:09 pm

செய்தி முன்னோட்டம்

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையகத்தில், கட்சித் தலைவர் விஜய் புதன்கிழமை (ஜூலை 30) 'வெற்றி பேரணியில் தமிழ்நாடு' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்வின் ஒரு பகுதியாக, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட MYTVK மொபைல் செயலியையும் அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். நிகழ்வில் பேசிய விஜய், அடிமட்ட அளவிலான ஒருங்கிணைப்பில் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "வெற்றிக்கான இந்த ஒருங்கிணைப்பில் மூலம் மக்களை ஒன்றிணைத்தால், நாம் வெற்றி பெற முடியும்" என்று அவர் கூறினார்.

புதியவர்கள்

புதியவர்கள் வெற்றி பெற்ற தேர்தல்

1967 மற்றும் 1977 தேர்தல்களில் புதியவர்கள் சக்திவாய்ந்த ஆட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றதை இணையாகக் காட்டி, 2026 தேர்தல்களும் இதேபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அவர் கூறினார். கட்சி உறுப்பினர்கள் மக்களுடன் நேரடியாக இணைய ஒவ்வொரு கிராமம் கிராமமாக, தெருத்தெருவாக, வீடு வீடாக செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, "மக்களிடம் செல்லுங்கள், மக்களோடு வாழுங்கள், மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்." என்பதை பின்பற்றுமாறு விஜய் வலியுறுத்தினார். மதுரையில் ஒரு பெரிய மாநாடு உட்பட தனது அடுத்தடுத்த தொடர்ச்சியான செயல்பாடுகளையும் விஜய் அறிவித்தார். மேலும் மக்களைச் சந்திக்க தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ளதையும் கூறினார்.