
நாடாளுமன்றத்தில் கைகுலுக்கி தோழமையை வெளிப்படுத்திய மோடி, ராகுல் காந்தி; வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற அமர்வுகளில் அடிக்கடி காணப்படும் காரசாரமான விவாதங்கள் கூச்சல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மாறாக, இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் கைகுலுக்கியதைக் காட்டும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ஓம் பிர்லா, மக்களவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த சிறிய நட்புறவு ஏற்பட்டது.
இன்று நாடாளுமன்றத்தின் சபாநாயகராக என்டிஏ வேட்பாளர் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பிரதமர் மோடி ஓம் பிர்லாவின் இருக்கைக்கு சென்று அவரை வாழ்த்தினார்.
அவரைத்தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் அமைச்சர் ரிஜூஜூ ஆகியோரும் ஓம் பிர்லா இருக்கைக்கு சென்று வாழ்த்தினர். அவரை சபாநாயகர் நாற்காலிக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு மோடி, ராகுல் இருவரும் கைகுலுக்கினர்.
ட்விட்டர் அஞ்சல்
தோழமையை வெளிப்படுத்திய மோடி, ராகுல் காந்தி
#Watch | சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து!
— Sun News (@sunnewstamil) June 26, 2024
மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இருக்கையில் அமர வைத்து அவரை வாழ்த்தினர்.#SunNews | #LokSabhaSpeaker | #OmBirla | @RahulGandhi | @narendramodi pic.twitter.com/BlIzSfkoUw