Page Loader
யூனியன் பட்ஜெட் 2024: வேளாண் திட்டங்களுடன் பட்ஜெட் உரையை துவங்கினார் நிர்மலா சீதாராமன் 
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வழங்கினார்.

யூனியன் பட்ஜெட் 2024: வேளாண் திட்டங்களுடன் பட்ஜெட் உரையை துவங்கினார் நிர்மலா சீதாராமன் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 23, 2024
11:21 am

செய்தி முன்னோட்டம்

இன்று இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வழங்கினார். முன்னதாக மக்களவைக்கு செல்வதற்கு முன், பார்லிமென்டில் உள்ள நிதியமைச்சகத்திற்கு அவர் வருகை புரிந்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு சிவப்பு நிற உரை அணிந்த டேப்லெட்-ஐ காட்டி, பட்ஜெட் உரைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். சரியாக 11 மணிக்கு துவங்கிய உரையில், வேளாண்மைக்கு ஆதரவாக திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

வேளாண்மைக்கு ஆதரவாக திட்டங்கள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு மற்றும் EPF குறித்து அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் கொண்ட பிரதமரின் தொகுப்பை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு மத்திய செலவீனமான ரூ.2 லட்சம் கோடி. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது" எனத்தெரிவித்தார். பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க ஹாஸ்டல் வசதி, பயிற்சி பட்டறைகள்,மத்திய அரசின் கீழ் பெண்களுக்கான 2 லட்சம் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

வேளாண் திட்டங்கள்

வேளாண் திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் 

வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார் நிதியமைச்சர். அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயிகளை ஈடுபடுத்தத் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வேளாண் துறையை டிஜிட்டல்மயமாக்க கவனம் செலுத்தப்படும். வேளாண் விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டுகள் வழங்குவது பற்றியும் அவர் தெரிவித்தார். கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம், அதற்காக இவற்றின் உற்பத்திக்கு நிதி உதவி, சேமிப்பிற்கான நிதி உதவியையும் அவர் அறிவித்தார்.