NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம் 
    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்

    'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபமாக திராவிடர் கழகம் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றிணைந்து சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றினை நடத்தினர்.

    இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிப்பு குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

    மேலும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றது குறித்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே உதயநிதி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

    இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சனாதனம் 

    உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல் 

    தொடர்ந்து அவர், இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணி என்ன? என்பதனை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை முன்னதாக நடைபெற்ற நிலையில், சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி ஸ்டாலினும், இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்தது.

    அந்த வகையில், இந்த மனு மீதான விசாரணை இன்று(நவ.,29)மீண்டும் நடைபெற்ற நிலையில், விசாரணைகள் நடைப்பெற்றது.

    அப்போது, 'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து 

    #BREAKING || சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு இல்லை - உச்சநீதிமன்றம்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது - நீதிபதிகள்

    இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்… pic.twitter.com/x6CI8mkg9d

    — Thanthi TV (@ThanthiTV) November 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அறநிலையத்துறை
    சென்னை
    சனாதன தர்மம்
    உதயநிதி ஸ்டாலின்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    அறநிலையத்துறை

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  கடலூர்

    சென்னை

    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு  மு.க ஸ்டாலின்
    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்
    அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும் மு.க ஸ்டாலின்
    காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்  தமிழ்நாடு

    சனாதன தர்மம்

    சர்ச்சையை கிளப்பி இருக்கும் 'சனாதன தர்மம்' என்றால் உண்மையில் என்ன? உதயநிதி ஸ்டாலின்
    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  திமுக
    செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே அமெரிக்கா
    'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு  உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை மு.க ஸ்டாலின்
    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு
    இன்பநிதி பெயரில் பாசறை - போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட் திமுக
    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025