LOADING...
தமிழக வெற்றி கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா: மேடையில் விஜய்யுடன் தோன்றிய பிரஷாந்த் கிஷோர்
மேடையில் விஜய்யுடன் தோன்றிய பிரஷாந்த் கிஷோர்

தமிழக வெற்றி கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா: மேடையில் விஜய்யுடன் தோன்றிய பிரஷாந்த் கிஷோர்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2025
11:10 am

செய்தி முன்னோட்டம்

தவெக-வின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் இன்று காலை தொடங்கியது. கடத்த ஆண்டு நடிகர் விஜய், அதிகாரபூர்வமாக தனது கட்சி 'தமிழக வெற்றிக் கழகம்' நிறுவியதன் மூலம் தீவிர அரசியலுக்கு நுழைந்தார். எனினும் பின்னர் அவர் மக்களை நேரடியாக சந்திக்கவில்லை என்ற சர்ச்சை கருத்துகள் எழுந்த நிலையில், தற்போது இரண்டாம் ஆண்டு விழாவை அவர் நடத்துகிறார். இந்த விழாவின் ஹைலைட்டாக பிரபல தேர்தல் வியூக செயற்பாட்டாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் மேடையில் விஜய்யுடன் தோன்றினார். முன்னதாக, பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்து செயல்படுவார் என்ற செய்திகள் உலவிய போதிலும், இரு தரப்பிலும் இது குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் மேடையில் தோன்றியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

ஆண்டு விழா விவரங்கள்

இந்த நிகழ்ச்சியில், மும்மொழி கொள்கைக்கு எதிராக, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக 'GetOut' கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய். மேலும், இந்த விழாவின் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் த.வெ.க. கட்சியில் இணையும் வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வருகை தந்தார். அவரை போல பலர் விஜய்யின் கட்சியின் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியலுக்கு புதிய மாற்றங்களை உருவாக்கும் என பலர் எதிர்பார்க்கின்றனர்.