LOADING...
தொடர்ந்து 'ஜோதிட' சர்ச்சையில் சிக்கும் TVK; அன்று OSD இன்று ஒரு MLA -என்ன நடக்கிறது?
தொடர்ந்து 'ஜோதிட' சர்ச்சையில் சிக்கும் TVK

தொடர்ந்து 'ஜோதிட' சர்ச்சையில் சிக்கும் TVK; அன்று OSD இன்று ஒரு MLA -என்ன நடக்கிறது?

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2026
11:49 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தனது 'ஜோதிட அலுவலகத்திற்கு' வரவழைத்து ஆலோசனை நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் எம்எல்ஏ சொகுசு சோபாவிலும், அரசு அதிகாரிகள் சாதாரண நாற்காலிகளிலும் அமர்ந்திருப்பது தவெக தொண்டர்கள் உட்பட பலரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கம்

ஜோதிட அலுவலக சர்ச்சை குறித்து எம்எல்ஏ விளக்கம்

இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ வீடியோ வடிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் புதுப்பித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், தற்காலிகமாகத் தனது பழைய ஜோதிட அலுவலகத்தையே எம்எல்ஏ அலுவலகமாகப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அலுவலகம் எங்கு இருந்தாலும், பொதுமக்களையும் அதிகாரிகளையும் சந்திப்பதற்கான தனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றும், இருக்கை அமைப்பில் தான் யாரையும் அவமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

புதிய சலசலப்பு

'டாக்டர்' பட்டம் குறித்த புதிய சலசலப்பு

தனது பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என்ற பட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த மற்றொரு சர்ச்சைக்குப் பதிலளித்த அவர், சர்வதேச அமைதிப் பல்கலைக்கழகத்தில் ஜோதிடப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறினார். தான் தொழில்முறையாக பிஏ, பிஎல் (BA BL) முடித்த ஒரு வழக்கறிஞர்; சமூக வலைதளங்களில் உடல்நலம் சார்ந்த வீடியோக்களைப் பதிவிடுவதால், பலரும் தன்னை மருத்துவர் எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர், 'டாக்டர்' என்பது தற்போது தனது பட்டப்பெயர் போல மாறிவிட்டது என அவர் விளக்கமளித்தார். இருப்பினும், போலியான டாக்டர் பட்டம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நேரடிப் பதில் அளிக்கவில்லை.

Advertisement

விமர்சனம்

தவெக கோட்பாடுகளும் தொடரும் விமர்சனங்களும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளராகக் கனிமொழி போட்டியிட்ட போதே, "ஜோதிடம் மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம்" என்று அவர் பேசியது விவாதப் பொருளானது. மேலும், தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அவரது ஜோதிடருக்கு(Ratan Pandit) அரசுப் பதவி வழங்கப்பட்டது சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இடதுசாரி கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது தவெக எம்எல்ஏ ஒருவர் மீண்டும் ஜோதிட அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது, கட்சியின் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகள் மீதான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement