NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்': TVK தலைவர் விஜய் பேச்சு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்': TVK தலைவர் விஜய் பேச்சு 

    'தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்': TVK தலைவர் விஜய் பேச்சு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 22, 2024
    11:51 am

    செய்தி முன்னோட்டம்

    பலரும் எதிர்பார்த்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் கொடியை இன்று சென்னையில் வெளியிட்டார் நடிகர் விஜய்.

    சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தின் நடந்த இந்த விழாவில் விஜய்யின் தந்தை-இயக்குனர் SAC, விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    கட்சியின் கொடியினை வெளியிட்டு பேசிய விஜய், கட்சியின் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கான விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #TVKVijay #TVKFlagLaunch #VijayTVK pic.twitter.com/4ENjkcmq3b

    — Mahendhiran Raja (@Maheraja73) August 22, 2024

    விஜய் பேச்சு 

    ஆரவாரங்களுக்கு இடையே அமைதியாக உரையாற்றிய விஜய்

    தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையே பேசிய விஜய்,"என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்" என்றார்.

    "புயலுக்குப் பின் அமைதி மாதிரி, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது. நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த நாளில், நம்முடைய கொள்கைகள், செயல்திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரைக்கும் சந்தோசமா, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்".

    சமத்துவ கொள்கை

    சமத்துவக்கொள்கை உறுதிமொழி

    "இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதை நான் பார்க்கிறேன். நான் சொல்லாமலேயே இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்" இவ்வாறு விஜய் பேசினார்.

    கொடியேற்றத்திற்கு முன்னர் தொடர்களும், கட்சி நிர்வாகிகளும் இணைந்து கட்சியின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அப்போது சமத்துவக்கொள்கை பேணுவோம் என உறுதி கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    தமிழக வெற்றி கழகம்
    நடிகர் விஜய்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விஜய்

    நடிகர் விஜய் துவங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல் நடிகர் விஜய்
    தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பு நடிகர் விஜய்
    சினிமா டு அரசியல்: தமிழ் சினிமாவிலிருந்து அரசியலுக்கு தாவிய பிரபலங்கள் யார்? தமிழ் சினிமா
    விஜயின் அரசியல் பயணத்தில் உடன் நிற்பேன்: இயக்குனர் சமுத்திரக்கனி நடிகர் விஜய்

    தமிழக வெற்றி கழகம்

    விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம் விஜய்
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று மாலை அறிமுகம் நடிகர் விஜய்
    மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்; தவெக வெளியிட்ட அறிவிப்பு விஜய்
    10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்  விஜய்

    நடிகர் விஜய்

    தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள் தமன்னா பாட்டியா
    நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது காலணி வீச்சு விஜயகாந்த்
    'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா? விஜய்
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய்  விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025