
சமத்துவக்கொள்கை பேணுவோம்: TVK கட்சி கொடி அறிமுக விழாவில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.
நேற்று TVK அறிவித்ததை போல, இன்று காலை 9:15 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் கட்சியின் கொடியினை செய்தார் விஜய்.
கொடி வெளியிடும் முன்னர் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜய் தலைமையில் தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி பினவருமாறு: "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்".
"நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்".
ட்விட்டர் அஞ்சல்
TVK உறுதிமொழி
TVK Pledge 🔥#TVKFlagDay#தமிழகவெற்றிக்கழகம்#TheGreatestOfAllTime pic.twitter.com/yBTmHVo1st
— Loki (@vaathi_loki) August 22, 2024
உறுதிமொழி
சமத்துவத்தை பேணுவோம் என TVK தொண்டர்கள் உறுதிமொழி
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்".
"சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்" என தவெக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.