NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு
    நெய்யின் தரத்தை சோதிக்க பிரத்யேக ஆய்வகம் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

    நெய்யின் தரத்தை சோதிக்க ரூ.75 லட்சத்தில் நவீன ஆய்வகம்; திருப்பதி தேவஸ்தானம் முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏஆர் பால் பண்ணையை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், கலப்பட நெய்யை விநியோகித்ததாகக் கூறி, அதற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாக அதிகாரி ஜே.சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

    திருப்பதியில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டிற்குப் பிறகு, அதன் முதல் அதிகாரப்பூர்வ பதிலில், அதை சரிசெய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

    மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, லட்டு தயாரிக்க மீண்டும் கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் தயாரிப்பான நந்தினி நெய்யை மீண்டும் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.

    ஆய்வகம்

    நெய்யை பரிசோதிக்க ஆய்வகம் அமைக்கும் திருப்பதி தேவஸ்தானம்

    நெய்யில் கலப்படம் குறித்த ஆய்வக அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதில் இருந்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

    இதையடுத்து மீண்டும் நெய் கொள்முதலுக்கு புதிய டெண்டரை விட திட்டமிட்டுள்ள தேவஸ்தானம், ரூ.75 லட்சம் மதிப்பில் திருப்பதில் நெய்யின் தரத்தை ஆய்வு செய்ய நவீன உபகாரணங்களைக் கொண்டு ஆய்வகம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இது, குவஹாத்தியில் உள்ள தேயிலை-சோதனை ஆய்வகங்களுக்கு நிகராக இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது.

    தற்போது, இந்தியாவில் நெய்யின் தரத்தை சோதிக்க பிரத்யேக ஆய்வகம் குஜராத்தின் ஆனந்த் நகரில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அங்குள்ள அமுல் நிறுவனம் வெளிநாடுகளுக்கு அதிகளவில் நெய்யை ஏற்றுமதி செய்வதால், இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    திருப்பதி

    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    திருப்பதியில் ஓராண்டிற்கு பிறகு ரூ.2 கோடியாக குறைந்த உண்டியல் வருவாய் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் கொண்ட புது செயலி அறிமுகம் இந்தியா
    திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு இந்தியா

    ஆந்திரா

    பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது தமிழக காவல்துறை
    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு அமெரிக்கா
    ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி  சந்திரபாபு நாயுடு

    இந்தியா

    டயமண்ட் லீக் போட்டியில் 0.01 மீட்டரில் வெற்றி வாய்ப்பை இழந்தார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு வணிக செய்தி
    நிலத்தடி நீர்மட்ட இழப்பை சரிக்கட்ட மாற்று பயிரிடுதல் தான் சரியான வழி; ஐஐடி ஆய்வில் தகவல் ஐஐடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025