Page Loader
திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது
2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது

திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து: 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 11, 2024
10:15 pm

செய்தி முன்னோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது, மைசூரில் இருந்து சென்னை வழியாக பிஹார் மாநிலத்துக்கு செல்லும் 'பாக்மதி எஸ்பிரஸ்' ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது பயணிகள் ரயில் மோதியது. இதனால் பயணிகள் ரயிலில் இருந்த 2 பெட்டிகள் மேலே சரக்கு ரயில் மீது ஏறின. மேலும், 5 பெட்டிகள் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளன, இதில் சில ஏசி பெட்டிகள் அடங்கும். அதோடு இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து இருந்ததாக கூறப்படுகிறது.

விவரம்

விபத்து விவரம் 

பெரம்பூரில் இருந்து இன்று இரவு 7.44 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரப்பேட்டைக்கு அருகே வந்ததாக கூறப்படுகிறது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் வேகமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சில பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதாகவும், விபத்தில் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனினும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதனை ரயில்வே அதிகாரிகள் விபத்தை உறுதி செய்துள்ளனர், ஆனால் விபத்தின் தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.

embed

Twitter Post

#BREAKING | கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.. நடந்தது என்ன?#SunNews | #TrainAccident | #Kavaraipettai | #IndianRailways pic.twitter.com/SG3tyt9bPx— Sun News (@sunnewstamil) October 11, 2024 #BREAKING | கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.. நடந்தது என்ன?#SunNews | #TrainAccident | #Kavaraipettai | #IndianRailways pic.twitter.com/SG3tyt9bPx— Sun News (@sunnewstamil) October 11, 2024

embed

Twitter Post

#BREAKING | கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடத்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மீட்பு வாகனங்கள் விரைகின்றன பேருந்து, குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. - திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா IAS#SunNews |...— Sun News (@sunnewstamil) October 11, 2024 #BREAKING | கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடத்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மீட்பு வாகனங்கள் விரைகின்றன பேருந்து, குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. - திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா IAS#SunNews |...— Sun News (@sunnewstamil) October 11, 2024