Loading...
நாளை 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை! சென்னையில் வானிலை எப்படி? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்
நாளை 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

நாளை 27 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை! சென்னையில் வானிலை எப்படி? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
08:17 pm

செய்தி முன்னோட்டம்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் நாளை (அக்.05) முதல் அக்.09 ஆம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை (அக்டாபர் 5) ஒரே நாளில் தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள முக்கிய மாவட்டங்கள்

வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதேவேளையில் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை

சென்னையில் மிதமான மழை மற்றும் வானிலை நிலவரம்

சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை பெய்யும் நேரங்களில் இடி, மின்னல் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மீனவர்கள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் பொது வழிகாட்டுதல்கள்

தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிடைக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, இக்காலக்கட்டத்தில் மீனவர்கள் குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ADVERTISEMENT