தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு: டிசம்பர் 24 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 25 தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 26 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 26 மற்றும் 28
தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30 தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.