
ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
நேற்று பிறை தென்பட்டதால், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில், இன்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "இஸ்லாமிய மக்களின் பெருமைக்குரிய ஈதுப் பெருநாள் ரம்ஜானில், அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக எப்போதும் இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக உறுதியுடன் நிற்கும். நபிகள் நாயகம் எடுத்துரைத்த சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் பாதையில் அனைவரும் நடக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 31, 2025
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், இஸ்லாமியப் பெருமக்களின்… pic.twitter.com/r32JchEGhh
வாழ்த்து
ரமலான் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து
"ரம்ஜான் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஏற்றம், மற்றும் நல்லிணக்கம் தரும் நாளாக அமையட்டும். அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்."என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.
"ரம்ஜான் பெருநாளில் கொடை வழங்கி, மகிழ்ச்சியில் திளைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்." என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,"ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் வழங்கி, ஈதுப் பெருநாளில் மகிழ்ச்சியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்கள்." எனக்கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்,"இந்த புனித நாளில் உலகளவில் அன்பு, சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம், அமைதி, வளம், முன்னேற்றம் ஆகியவை வளர செய்ய அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்." என வாழ்த்தியுள்ளார்.