Page Loader
பிரபல யூடியூபர் இர்பான் மீது வழக்கு பாயும் அபாயம்! தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்ப திட்டம்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும்

பிரபல யூடியூபர் இர்பான் மீது வழக்கு பாயும் அபாயம்! தமிழ்நாடு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்ப திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2024
03:19 pm

செய்தி முன்னோட்டம்

யூடியூபில் ஃபூட் ரெவியூ செய்து பிரபலமடைந்தவர் இர்பான். இவர் உணவகங்களை ரெவியூ செய்து அதன்பின்னர் தற்போது பிரபலங்களையும் இன்டெர்வியூ செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிடும் ஒரு வீடியோவை சமீபத்தில் பதிவேற்றி இருந்தார். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் தான் துபாய்க்கு தனது குடும்பத்தோடு சென்றிருந்த இர்பான், அங்கிருக்கும் மருத்துவமனையில் மனைவிக்கு ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்தார். அதுமட்டுமின்றி அதனை பொதுவெளியில் அறிவித்து ஒரு விழா போல கொண்டாடியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பாலினத்தை கண்டறிந்து, அதனை அறிவித்த குற்றத்திற்காக யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.

embed

யூடியூபர் இர்பான் மீது வழக்கு?

குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்ஃபான் மீது நடவடிக்கை?#Irfanview | #GenderReveal | #Irfan | #Gender pic.twitter.com/jwPzT9HJuI— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 21, 2024