
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவிருக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்; என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில், சென்னை, கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்து வழக்கம்.
இந்த காலங்களில் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாலும், கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக, அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
விவரங்கள்
கட்டண விவரங்கள்
இதற்காக, போக்குவரத்து சிரமங்களை குறைக்கவும் முடியும். தனியார் பேருந்துகளுக்கான ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை அரசு நியமிக்கும்.
பண்டிகைக் காலங்களில் எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு முறை பேருந்து இயக்கப்படும் என்பதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
பேருந்து பராமரிப்பைப் தனியார் உரிமையாளர்கள் மேற்கொள்வார்கள்.
பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கும் என்பதால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.