LOADING...
இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா: தேதி குறிச்சாச்சு
இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா

இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா: தேதி குறிச்சாச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2025
01:39 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இது சார்ந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 2ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அவருக்கு விழா எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இசையமைப்பாளர் 'இசைஞானி' இளையராஜா, லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றினார்.

சிம்பொனி 

வெறும் 35 நாட்களில் சிம்பொனியை எழுதிய இளையராஜா

லண்டன் நிகழ்ச்சியில் வேலியண்ட் என்ற தலைப்பில் அவரது முதல் சிம்பொனி இடம்பெற்றது. அதை அவர் வெறும் 35 நாட்களில் உருவாக்கினார். இந்த சாதனை, இவ்வளவு மதிப்புமிக்க உலகளாவிய மேடையில் சிம்பொனியை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அவருக்கு அளிக்கிறது. 90 நிமிட நிகழ்வில் 45 நிமிட சிம்பொனி பகுதியும் இடம்பெற்று. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில் அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட புகழ்பெற்ற பிரபலங்களும், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பால்கியும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பை அளித்ததால், அரங்கில் இருந்த சூழல் மிகவும் உற்சாகமாக இருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post