முதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை படித்த பிறகு, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஒரு வருட கட்டாய மருத்துவ பயிற்சிக்குப் பிறகு முதுகலை படிப்பையே தொடர்ந்து படிக்க விரும்புகின்றனர்.
தங்களுக்கு பிடித்தமான ஸ்பெஷலைசேஷனை (Specialisation) தேர்வு செய்து அதில் முதுநிலை படிப்பை படிப்பதுண்டு.
எனினும், முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன் படி, முதுகலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டு காலம் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு என்ற விதி தளர்த்தப்பட்டு, ஓராண்டு மட்டும் பணியாற்றினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
#BREAKING | முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதி தளர்வு - அரசாணை வெளியீடு#SunNews | #TNHealth | #PGMedical pic.twitter.com/GL1E8nHYMZ
— Sun News (@sunnewstamil) January 12, 2024