Page Loader
மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட் 
விடுபட்டவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட் 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2024
05:02 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த வருடம் மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. எனினும், குடும்ப அட்டை இல்லாதவர்களும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று அப்போது தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து, அந்ததந்த பகுதியில் இருந்த ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இன்று தகுதியான குடும்பங்களுக்கு 6000 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மிக்ஜாம் புயல் நிவாரணம்