Page Loader
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2025
07:02 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு தமிழகத்தை தாக்கிய ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தை தாக்கிய புயலால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கான நிவாரணம் வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதனடிப்படையில் தற்போது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 18 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், 5,18,783 விவசாயிகள் பயன் பெறுவார்கள். மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500, நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கப்படுமென்று முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post