Page Loader
தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்; ஆளுநர் ரவி வாழ்த்து
தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்; ஆளுநர் ரவி வாழ்த்து

தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்; ஆளுநர் ரவி வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Sep 18, 2023
12:40 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் எங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான விநாயகர் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். "விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும்." என அந்த அறிக்கையில் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆளுநர் ரவி வாழ்த்து