LOADING...
தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு 2026: அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை பெறுமா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு 2026: அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை பெறுமா?

எழுதியவர் Vasuki
Apr 29, 2026
08:19 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் குறித்துப் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய எக்ஸிட் போல் தரவுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மற்ற கணிப்புகளுக்கு மாறாக, இந்த எக்ஸிட் போல் அதிமுக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகளை முன்வைத்துள்ளது. எந்தவொரு கூட்டணிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை (118) கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால், தமிழகத்தில் ஒரு தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தக் கணிப்பு எச்சரிக்கிறது.

தொகுதிப் பங்கீடு

அதிமுக கூட்டணி முன்னிலை

இந்தக் கணிப்பின்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 114 முதல் 124 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. இதன் சராசரி (Mid-Point) 119 இடங்கள் ஆகும். இது பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட சற்று அதிகம் என்பதால், அதிமுக ஆட்சியைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம், ஆளும் திமுக கூட்டணி 103 முதல் 113 இடங்களைப் பெற்று (சராசரி 108) இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மண்டல வாரியான பலப்பரீட்சை

அதிமுகவின் கோட்டைகள்

மண்டல ரீதியாகப் பார்க்கும்போது, அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வடக்கு (North) மற்றும் மேற்கு (West) மண்டலங்களில் அதிமுக கூட்டணி அசுர பலத்துடன் உள்ளது. வடக்கில் 32-34 இடங்களையும், மேற்கில் 33-35 இடங்களையும் அதிமுக வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் தெற்கு மண்டலங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. டெல்டாவில் 20-21 இடங்களையும், தெற்கில் 32-34 இடங்களையும் திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது. தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக 19-21 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்தாலும், அதிமுக 12-14 இடங்களுடன் வலுவான போட்டியை வழங்குகிறது.

Advertisement

இழுபறியில் எக்ஸிட் போல் முடிவுகள்

கிங் மேக்கராக மாறும் தவெக?

இந்த எக்ஸிட் போலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK). தவெக 4 முதல் 10 இடங்கள் வரை (சராசரி 7) கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை மண்டலத்தில் 3 முதல் 5 இடங்களை விஜய் கட்சி வெல்லக்கூடும். ஒருவேளை அதிமுக அல்லது திமுக ஆகிய இரு கூட்டணிகளும் 118 என்ற மேஜிக் எண்ணைத் தொடத் தவறினால், தவெக எடுக்கும் முடிவே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும். அதாவது, விஜய் 'கிங் மேக்கராக' மாற வாய்ப்புள்ளதாக இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.

Advertisement