Page Loader
சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்த திட்டத்தின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டணமில்லாமல் வழங்கப்படும்

சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2025
01:30 pm

செய்தி முன்னோட்டம்

பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, ரூ.6.04 கோடி செலவில் நிறுவப்பட்ட 50 தானியங்கி குடிநீர் ஏ.டி.எம். இயந்திரங்கள், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டணமில்லாமல் வழங்கப்படும். பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பாட்டில்களில் தங்களுக்குத் தேவையான அளவான 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு அளவுகளில் நீரை பெறலாம். ATM இயந்திரங்கள் முன் வடிகட்டல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்(RO), புற ஊதாக் கதிர்கள் உள்ளிட்ட மூன்று அடுக்குகளில் நீரை சுத்திகரித்து தேசிய தரத்திற்கு இணையான நீரை வழங்குகின்றன.

முக்கிய அம்சங்கள்

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

குடிநீர் ஏ.டி.எம்.க்கள் கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள், சந்தை பகுதிகள் போன்ற மக்கள் திரளும் இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. தினமும் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் வசதி கொண்டவை. நீரின்றி இயந்திரம் இருந்தால், கடவுச்சொல் மூலம் ரீசார்ஜ் செய்து நீர் பெறும் வசதி உள்ளது. கடைசி 50 பரிவர்த்தனைகளின் விவரங்களைப் பார்க்கும் வசதி பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பேட்டரி சக்தியில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குடிநீரை நிரப்ப ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் மூலம் கட்டண வசூல் செய்யப்படும். பயனாளர்களுக்கு நீர் விநியோகம் மற்றும் ரீசார்ஜ் விவரங்கள் SMS மூலமாக உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post