துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின், நாளை பதவியேற்பு
தமிழ்நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய அறிவிப்பாக துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவி ஏற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மாற்றம் செய்து, அதற்கான ஒப்புதலை பெற இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை மாற்றங்களை ஏற்று கொள்வதாக ஆளுநர் RN ரவி அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆளுநர் மளிகை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் அதே அறிவிப்பில் தற்போது ஜாமீனில் வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் இணைகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Twitter Post
Twitter Post
அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
புதிய அமைச்சரவையில் இருந்துஅமைச்சர்கள் மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செய்வராஜ், மனிதவள மேலாண்மைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறைக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பால்வளத்துறைக்கும் மாற்றப்படுகின்றனர். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் துறை அமைச்சரவையும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.