Page Loader
'ஸ்டாலினுக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்': பாஜகவின் வாழ்த்து செய்தி
மு.க.ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர், பாஜகவினர்

'ஸ்டாலினுக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்': பாஜகவின் வாழ்த்து செய்தி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2024
02:38 pm

செய்தி முன்னோட்டம்

குலசேகரப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள இஸ்ரோவின் புதிய ஏவுகணைதளத்திற்கு வாழ்த்தி விளம்பரம் செய்தபோது அதில் 'சீனக்கொடி' இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது. இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாஜகவினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தமிழக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் வெளியான இந்த வாழ்த்து செய்தியில்,"மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிடித்தமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! அவர் நீண்ட ஆயுளுடன் வாழட்டும்!" என்று பாஜக ட்வீட் செய்துள்ளது. கடந்த புதன்கிழமை, திமுக தலைவரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் சார்பாக வெளியான விளம்பரத்தில், ராக்கெட் மீது சீனாவின் கொடி அச்சிடப்பட்டிருந்தது. "இது வடிவமைப்பாளரின் தவறு என்றும், கட்சிக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை"என்று அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று விளக்கமளித்தார்.

embed

தமிழக பாஜக வாழ்த்து

For those who would like to wish our CM in Mandarin, please use this: 穆图维尔 卡鲁纳尼蒂 斯大林生日快乐 我们祝您健康长寿 (Happy birthday Stalin! Wish you a long and healthy life!)— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 1, 2024