LOADING...
கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம்!

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2025
01:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,விதி எண் 55-ன் கீழ் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல்வேறு கட்சிகள் தனது ஆதரவை தெரிவித்தன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கிய அம்சங்கள்

பல்கலைக்கழகத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய பல்கலைக்கழகம் கும்பகோணத்தில் அமைக்கப்படும். இது குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இதற்கான உறுதியான அறிவிப்பை வெளியிட்டார். "எந்தவித தயக்கமுமின்றி, கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்" என அவர் உறுதிபடக்கூறினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் உருவாக்கப்படும் இந்த பல்கலைக்கழகம், கலைஞரின் கல்வி குறித்த பார்வைக்கும், அவருடைய சமூக சேவைக்கும் சான்றாக இருக்கும் என சட்டமன்றத்தில் முதல்வர் தெரிவித்தார்.