நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் நடைபெறும்
செய்தி முன்னோட்டம்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
மணிப்பூரில் 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையில், மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை-19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து, INDIA கூட்டணி(காங்கிரஸ், திமுக உட்பட) கட்சிகளும், தெலுங்கானாவின் BRS கட்சியும், மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக இரண்டு தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளன.
சிஜோஞ்
ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் மோடி விவாதங்களுக்கு பதிலளிப்பார்
இந்த தீர்மானங்களை ஏற்றுக்கொண்டார். இதற்கான, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் தேதியை மக்களவை சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 8 மற்றும் 9 தேதிகளில் இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும்.
பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 272 எம்பிக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
தற்போது, பாஜக கட்சியை சேர்ந்த 303 எம்பிக்கள் மக்களவையில் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி மக்களவை எம்பிக்கள் 144 பேர் மட்டுமே உள்ளனர்.
அதனால், எதிர்க்கட்சிகள் இதில் வெற்றிபெறுவது சாத்தியம் இல்லை என்றே கூறலாம்.