Loading...
தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயப் பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயப் பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கப்படும்

தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயப் பட்டியலில் இடம்பெற பரிந்துரைக்கப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
01:02 pm

செய்தி முன்னோட்டம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை 'உலக அதிசயப் பட்டியலில்' இடம்பெற செய்ய பரிந்துரைக்கப்படும் என மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சஞ்சய்குமார் ஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சஞ்சய்குமார் ஜா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதா மூர்த்தி, எஸ். கல்யாணசுந்தரம், கே.இ. பிரகாஷ், அனுராக் சர்மா, பாபுசிங் குஷ்வாஹா, கேஷரின் தேவ் சிங் ஜாலா மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். விஜய்சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்

பெருமிதம்

"தாஜ்மஹாலை விடச் சிறப்பானது"

கோயிலில் தரிசனம் செய்த குழுவினர், அங்குள்ள பழமையான ஓவியங்கள், கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களைப் பார்வையிட்டதுடன், கோயிலின் கட்டிடக்கலை நுணுக்கங்கள் மற்றும் கல்வெட்டுச் செய்திகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய்குமார்,"தஞ்சாவூர் பெரிய கோயில் இந்தியாவின் ஒரு அதிசயம். வட இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலை மட்டுமே நாங்கள் அதிசயமாக நினைத்தோம்; ஆனால், பெரிய கோயில் அதைவிடப் பெரியதாகவும், மிகச் சிறப்பாகவும் உள்ளது".

"யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக உள்ள பெரிய கோயிலை, உலக அதிசயமாக அறிவிக்க நாடாளுமன்றக் குழு நிச்சயம் பரிந்துரைக்கும்" என்றார்.

"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய பிரம்மாண்டமான கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் அற்புதமான பொக்கிஷம்" என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ADVERTISEMENT