ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பக்தர்கள் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. எனினும் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பக்தர்கள் சென்ற பேருந்து ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்தியா டுடே படி, ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் அதே பயங்கரவாதக் குழுதான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்
#Breaking : Suspected terror attack in #JammuKashmir. A bus carrying pilgrims was targeted, fired upon, the driver lost control and the bus fell into a gorge. Several feared dead. Incident happened near Jammu's Reasi. No one has claimed responsibility as yet pic.twitter.com/pshSrMtwAq— Tamal Saha (@Tamal0401) June 9, 2024