Page Loader
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தற்போது நிலவும் வெப்பநிலையை விட 5-6 டிகிரிக்கள் அதிகமாக இருக்கக்கூடும்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 18, 2024
05:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் வெப்பநிலையை விட 5-6 டிகிரிக்கள் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. எனினும் இந்த இரண்டு நாட்களுக்கு பின்னர், வெயிலின் தாக்கம் சற்றே குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையில் 36 டிகிரி வரை வெப்பநிலை நிலவி வருகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

embed

வெப்பநிலை அதிகரிக்கும்

#வானிலைசெய்திகள் | தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!#SunNews | #Summer | #WeatherUpdate pic.twitter.com/QbmnL3BJMX— Sun News (@sunnewstamil) April 18, 2024