
அமராவதி இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்
செய்தி முன்னோட்டம்
அமராவதி இன்னர் ரிங் ரோடு சாலை வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியது.
அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான வாதத்தை கேட்ட நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் அக்டோபர் 16-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அங்கல்லு 307 வழக்கில் வியாழக்கிழமை வரை யாரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் சிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விஜயவாடா ஏசிபி நீதிமன்றத்தில் சிஐடி தாக்கல் செய்த, இன்னர் ரிங் ரோடு மனு மீதான பிடி வாரண்டையும்ம் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கிட்ஜ்ஸ்
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு
அமராவதி இன்னர் சாலை வழக்கு என்பது அமராவதி தலைநகரின் மாஸ்டர் பிளான் என்று கூறப்படும் உள்வட்ட சாலை அமைக்கும் போது நடந்த பணமோசடி ஊழல் தொடர்பான வழக்காகும்.
ஆகஸ்ட் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய அரசியல் பேரணியின் போது நடந்த கலவரத்துடன் தொடர்புடைய வழக்கு அங்கல்லு 307 வழக்காகும்.
சந்திரபாபு நாயுடு வெவ்வேறு வழக்குகளில் தாக்கல் செய்த மூன்று ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் திங்களன்று நிராகரித்தது.
தற்போது, திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.