Loading...
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை: சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முதல்வர் விஜய் முடிவு?
பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை: சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முதல்வர் விஜய் முடிவு?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
07:53 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பண்டிகை காலங்களில் மது போதையால் ஏற்படும் மோதல்கள் மற்றும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த, முக்கிய பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளை மூட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விடுமுறை

தற்போதைய டாஸ்மாக் விடுமுறை நாட்கள்

தற்போதைய நடைமுறைப்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே கட்டாய விடுமுறை (Dry Days) அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம் (உழைப்பாளர் தினம்), சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள் (மிலாது நபி), காந்தி ஜெயந்தி

இந்த 8 நாட்களுடன் கூடுதலாக இனி முக்கிய பண்டிகை தினங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது மாநில அரசியலிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT