LOADING...
2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய்

2 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க போகிறார் தவெக தலைவர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2025
07:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் இன்று தெரிவித்துள்ளார். தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் விஜய் பொதுவெளியில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்ற பேச்சு சமீப காலமாக அதிகம் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வரை விஜய் பொதுவெளியில் பேசியது கட்சி மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீடு, பரந்தூர் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது மட்டுமே. தலைவர்கள் பிறந்தநாளுக்கு வீட்டிலிருந்தே அறிக்கை வெளியிடுகிறார் என்ற பேச்சும் எழுந்தது. தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க கூட அவர் வருவதில்லை எனவும் சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது சூறாவளி சுற்று பயணத்திற்கு தயாராகி விட்டார் விஜய்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post