
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இது, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக கல்வித் துறையில் தமிழ்நாடு எடுக்கும் ஒரு முக்கியப் படியாக பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு அரசுக்கு சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக ஏற்க மறுக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை நிலைப்படுத்துகிறது.
மாற்று
NEP-க்கு நேரடி பதிலடி
மும்மொழித் திட்டம், பொதுத் தேர்வுகள், மற்றும் ஒரே நுழைவுத் தேர்வுகள் போன்ற NEP பரிந்துரைகளை திமுக அரசு கடுமையாக எதிர்த்து வந்தது. புதிய மாநிலக் கொள்கை, இந்த எதிர்ப்பை சீராகக் கூறுவதோடு மட்டுமல்லாமல், அதற்கு மாற்றான தீர்வுகளையும் முன்வைக்கிறது. அதாவது, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்து, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் முக்கிய அம்சங்களில், அனைவருக்கும் தரமான கல்வி, அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களில் கவனம் செலுத்தல், மற்றும் ஆங்கில மொழித் திறன்கள் மேம்பாடு ஆகியவை அடங்கும். அரசு பள்ளிகளில் முதலீடு அதிகரித்தல், பல்கலைக்கழகங்களின் ஒழுங்குமுறை வலுவாக்கல் போன்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.
மோதல்
மத்திய அரசுடன் நிலவும் மோதல்
NEP-ஐ ஏற்காத தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு ரூ. 2,152 கோடி சர்வசிக்ஷா அபியான் நிதியை நிறுத்திவைத்துள்ளது. இது அரசியலமைப்புக்கு மாறானது என்றும், கல்வி ஒரு பொது உரிமை என்பதால் மாநிலத்திற்கான உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த சூழலில் தான் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையும் வெளியானது. மாநிலக் கல்விக் கொள்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரே இந்திய மாநிலமாக தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. புதிய கொள்கை மூலம், கல்வித் துறையில் சமூகநீதி, வளர்ச்சி, மற்றும் தனித்துவத்தை உறுதி செய்யும் என்றும் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | பள்ளி கல்விக்கான மாநில கல்வி கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
— Sun News (@sunnewstamil) August 8, 2025
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவினர் தயாரித்த மாநில கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த 2024ம் ஆண்டும் ஜூலை 1ம் தேதி அரசிடம் சமர்ப்பிப்பு #SunNews | #TNStateEducationPolicy |… pic.twitter.com/v20oztPWyn
மொழிக்கொள்கை
இரு மொழி கொள்கை
மாநில கல்விக் கொள்கை, NEP-இன் மும்மொழி கொள்கையை நிராகரித்து, மாநிலத்தின் இருமொழிக் கொள்கையை தக்க வைத்துக் கொள்ளும். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகளுக்கான NEP-யின் முன்மொழிவை இது எதிர்க்கிறது. இந்த பொதுத்தேர்வு பிற்போக்குத்தனமானது, சமூக நீதிக்கு எதிரானது, மேலும் அதிக இடைநிற்றல் விகிதங்கள் மற்றும் கல்வியின் வணிகமயமாக்கலுக்கு ஒரு சாத்தியமான காரணியாகும் என மாநில கல்விக்கொள்கை கூறுகிறது. அரசு நடத்தும் நிறுவனங்களில் கணிசமான முதலீட்டுடன், அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிற்கு ஒரு பெரிய உந்துதலை இந்தக் குழு முன்மொழிந்துள்ளது. கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலின் கீழ் மீண்டும் கொண்டுவரவும் பரிந்துரைத்துள்ளது.