Loading...
பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது: எத்தனை நாட்கள் விடுமுறை & எப்போது திறப்பு?
பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை அட்டவணை வெளியானது

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது: எத்தனை நாட்கள் விடுமுறை & எப்போது திறப்பு?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2026
09:56 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான 2026 ஆம் ஆண்டு அரையாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளுக்காக விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதிகள் மற்றும் விடுமுறை நாட்களின் முழு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை

10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10-ம் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15, 16-லும் தேர்வு ஆரம்பம்

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 10 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வு வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி முடிவடைகிறது.

இதேபோல் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி நிறைவடைகின்றன.

மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

பள்ளி திறப்பு தேதி

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை 11 நாட்கள் விடுமுறை மற்றும் ஜனவரி 4 பள்ளி திறப்பு

அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 23-ஆம் தேதி தேர்வுகள் முடிவடையும் நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 3-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்களுக்கு மொத்தம் 11 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது.

விடுமுறை நாட்கள் முடிவடைந்த பிறகு வரும் ஜனவரி 4-ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கமான வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிறப்பு வகுப்புகளுக்குத் தடை

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை மற்றும் 3-ஆம் பருவப் புத்தகங்கள் வழங்க உத்தரவு

அரையாண்டு விடுமுறை நாட்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவப் பாடப்புத்தகங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT