LOADING...
இன்று ஒரே நாளில் தமிழகத்தை அதிரவைக்கும் அரசியல் தலைவர்கள்! 
தமிழக தேர்தல் களம் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது

இன்று ஒரே நாளில் தமிழகத்தை அதிரவைக்கும் அரசியல் தலைவர்கள்! 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 15, 2026
10:51 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 21-ம் தேதியுடன் பரப்புரை ஓயவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் TVK தலைவர் விஜய் வரை அனைத்து முக்கியத் தலைவர்களும் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பயணம் மேற்கொள்கின்றனர். இன்றைய பயணம் பின்வருமாறு: பிரதமர் நரேந்திர மோடி- பிற்பகல் 3:00, நாகர்கோவில் (மெகா ரோடு ஷோ) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்- மாலை 5:00 / இரவு 7:00, தர்மபுரி / சேலம் விஜய்(த.வெ.க)- மாலை 4:00 முதல், சென்னை (தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர்) EPS- மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள் சீமான்- புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை

பாதுகாப்பு

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள்

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறுவதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் நடிகர் விஜய் வாகனப் பரப்புரை மேற்கொள்ளும் தி.நகர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதிகளில் மாலை நேரத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இத்தனை முக்கியத் தலைவர்கள் களமிறங்குவதால், மாநிலம் முழுவதும் அரசியல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. காவல்துறையினர் ஆங்காங்கே டிரோன்கள் பறக்கத் தடை விதித்தும், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

Advertisement