தரவுகள் கசிந்த விவகாரம்; டெலிகிராம் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஸ்டார் ஹெல்த்
செய்தி முன்னோட்டம்
பாலிசிதாரர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஹேக்கர் குழு டெலிகிராம் மெசேஜிங் செயலியை பயன்படுத்துகிறது என்று ராய்ட்டர்ஸ் சமீபத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், டெலிகிராம் மற்றும் ஹேக்கர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
உலகளவில் டெலிகிராம் மீது மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் அதன் நிறுவனர் பாவெல் துரோவ் கடந்த மாதம் பிரான்சில் கைது செய்யப்பட்டதற்கு மத்தியில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தற்காலிகதீர்வாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தரவுகளை டெலிகிராம் மற்றும் ஹேக்கர்கள் மூலம் வெளியிடும் தளங்களை தடை செய்வதற்கான உத்தரவை பெற்றுள்ளது.
கிளவுட்ஃப்ளேர்
அமெரிக்க நிறுவனம் மீதும் வழக்கு
வலைத்தளங்களில் கசிந்த தரவு அதன் சேவைகளைப் பயன்படுத்தி ஹோஸ்ட் செய்யப்பட்டதாகக் கூறி, அமெரிக்க மென்பொருள் நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் மீதும் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
4 பில்லியனைத் தாண்டிய சந்தை மூலதனத்தைக் கொண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஸ்டார் ஹெல்த், வியாழக்கிழமை (செப்டம்பர் 26) செய்தித்தாள் விளம்பரத்தில் முதல் முறையாக வழக்கின் விவரங்களைப் பகிரங்கப்படுத்தியது.
இந்த விவகாரத்தில் டெலிகிராம் மற்றும் கிளவுட்ஃப்ளேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை அக்டோபர் 25 அன்று விசாரிக்கும்.
ஸ்டார் ஹெல்த் என்ற வர்த்தகப் பெயரைப் பயன்படுத்துவதிலிருந்து டெலிகிராம் மற்றும் கிளவுட்ஃப்ளேரைத் தடுக்கும் அல்லது அதன் எந்தத் தரவையும் ஆன்லைனில் கிடைக்கச் செய்வதற்கு நிறுவனம் தடை உத்தரவு கேட்டுள்ளதாக ஸ்டார் நிறுவனம் செய்தித்தாள் விளம்பரத்தில் கூறியுள்ளது.