இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு
இந்தியா, மலேசியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுடன் வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள அண்டை நாடான இலங்கையின், பெரும் பங்கு வருவாய் சுற்றுலாத்துறையில் இருந்து வருகிறது. கொரோனா காலத்திற்குப் பின் சுற்றுலாத் தொழில் நலிவடைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்க இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, இலங்கைக்கு வருவோருக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பரீட்சார்த்த முறையில் அடுத்தாண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.